வெயங்கொட - கட்டுவஸ்கொட பகுதியில் நேற்றிரவு 27 வயதான தனது மனைவியை உடற்பயிற்சி உபகரணத்தினால் தாக்கி கொலை செய்த கணவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைகளுக்காக வத்துபிட்டிவல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனையின் பின்னர் உடல் குறித்த பெண்ணின் உறவினரிடம் வழங்கப்படவுள்ளதாக வெயாங்கொட பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.