இந்தியா - தமிழ் நாடு, நெல்லை மாவட்டம், ராதாபுரம்  பொலிஸ் நிலையத்தில்  இரவு நேரப்பணியில் இருந்த பெண் காவலர் ஒருவருக்கு பொலிஸ் நிலையத்தின் தொலைபேசியில் தினமும் மர்ம நபர் ஒருவர் ஆபாசமாக பேசி வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த பொலிஸ் நிலையத்தில் கடந்த சில நாட்களாக இரவுப்பணியில் உள்ள பெண் காவலர் ஒருவருக்கு தினமும் நள்ளிரவில் தொலைபேசி மூலம் ஆபாசமாக மர்ம நபர் ஒருவர் பேசி வந்துள்ளார்.  இணைப்பை துண்டித்தாலும் மீண்டும் மீண்டும் குறித்த நபர் ஆபாச பேச்சை தொடர்ந்துள்ளார்.

தினமும் குறித்த  மர்ம நபர் தொலைபேசி மூலம் பாலியல் தொல்லை கொடுத்ததை அடுத்து அந்த பெண் காவலர் ராதாபுரம் பொலிஸ் நிலைய உதவி ஆய்வாளர் சிவகுமாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். இது குறித்து விசாரணை செய்த பொலிஸாருக்கு ஆபாசமாக பேசிய மர்ம நபர் காஷ்மீர் பகுதியில் பணியாற்றி கொண்டிருக்கும் இராணுவ வீரர் என்று தெரியவந்துள்ளது.

குறித்த இராணுவ வீரர் மீது துறைரீதியிலான நடவடிக்கை ஒழுக்காற்று நடவடிக்கை  எடுக்க  நீதிமன்றை அனுகியுள்ளனர்.