(எம்.எப்.எம்.பஸீர்)

சி.எஸ்.என். தொலைக்காட்சி ஊடாக மேற்கொள்ளப்பட்ட சட்ட விரோத செயற்பாடுகள் குறித்து கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்ப்ட்டுள்ள யோஷித்த ராஜபக்ஷ, ரொஹான் வெலிவிட்ட உள்ளிட்ட நால்வரின் பிணை கோரிக்கை மனுக்கள் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.  இதன் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தான் வழமையாக அணியும் தேசிய ஆடைக்கு மேலாக சட்டத்தரணிகள் அணியும் கறுப்பு நிற கோட்டினை அணிந்து மன்றில் ஆஜரானார். 

யோஷித்த சார்பு சட்டத்தரணிகள் குழாமில் அவர் இருக்காத போது சட்டத்தரணிகளின் ஆடையிலேயே மன்றினுள் காணப்பட்டார்.

இந் நிலையில் குறித்த பிணை மனு எதிர்வரும் 29 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் சட்டத்தரணிகளுடன் வெளியே வந்த மஹிந்த ராஜபக்ஷவிடம் ஊடகவியலாளர்கள் ஒலிவாங்கிகளை நீட்டி கருத்து கேட்டனர்.

எனினும் எந்தவொரு கருத்தினையும் வெளிப்படுத்தாத மஹிந்த ராஜபக்ஷ புன்னைகைத்தவாறே தனது வாகனத்தை நோக்கி நடத்து சென்ரார்.

வாகனத்தின் கதவை திறந்த பின்னர் அவர் நீதி மன்றின் முன் திரண்டிருந்தவர்களை பார்த்து கையசைத்துவிட்டு அங்கிருந்து திரும்பியமை குறிப்பிடத்தக்கது.