நாட்டின் சில மாகாணங்களில் நாளை அதிகளவான வெப்பநிலை உணரப்படுமென காலநிலை அவதானநிலையம் எதிர்வுகூறியுள்ளது. 

இதனால் வெளியில் செல்வோர் மிகவும் அவதானத்துடன் செல்லுமாறு அந்நிலையம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

குறிப்பாக நாளை வடக்கு, வடமேல், கிழக்கு, ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அதிகளவில் வெப்பம் உணரப்படுமென காநிலை அவதான நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.