கொரில்லா படத்தைத் தொடர்ந்து நடிகர் ஜீவா நடிக்கவிருக்கும் ‘ஜிப்ஸி ’படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒரு புதுமுக நடிகை நடாஷா சிங் தெரிவாகியிருக்கிறார்.
குக்கூ, ஜோக்கர் ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குநர் ராஜு முருகன் இயக்கவிருக்கும் படம்‘ ஜிப்ஸி’. இந்த படத்தில் நாயகனாக ஜீவா நடிக்கிறார். விரைவில் தொடங்கவிருக்கும் இந்த படத்தில் ஜீவாவிற்கு ஜோடியாக நடிக்க மொடலிங் மங்கையான நடாஷா சிங் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். இவர் 2016 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா அழகி போட்டியில் பங்குபற்றியவர். இவரை இயக்குநர் ராஜு முருகன் தெரிவு செய்து தமிழ் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகப்படுத்துகிறார்.
இது குறித்து அவரிடம் கேட்டபோது,‘தமிழில் நடிகையாக அறிமுகமாவது மகிழ்ச்சியளிக்கிறது. பயணத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த படத்தில் நான் பாரம்பரியம் மிக்க குடும்ப பின்னணியைக் கொண்ட பெண்ணாக நடிக்கிறேன். வெட்கப்படும் பெண்ணான நான் நாயகனைக் கண்டதும் காதலிக்கிறேன். அதன் பிறகு எம்முடைய வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களை நீங்கள் திரையில் காணலாம்.’ என்றார்.
தகவல் : சென்னை அலுவலகம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM