அமைச்சரவையில் மாற்றங்களை மேற்கொண்டாலும் தற்போதைய அரசாங்கத்தினால் நாட்டை மீளக்கட்டியெழுப்ப முடியாது என  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.என்ன மாற்றங்களை செய்தாலும் இந்த அரசாங்கத்திற்கு நாட்டை அபிவிருத்தி செய்யும் திறன் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.மே தினம் பிற்போடப்பட்டமை குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி இலங்கையில் தொழிலாளர் உரிமைகள் சிறிது சிறிதாக பறிபோகின்றன என தெரிவித்துள்ளார்.காலியில் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன நடத்தவுள்ள மே தினக்கூட்டம் பெரு வெற்றி பெறும் எனவும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த பேரணிக்கு தேசிய அரசாங்கத்திலிருந்து விலகி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் 16 பேரை அழைக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.