மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளிலுள்ள வீடுகளில் கடந்த சில மாதங்களாக தொடராக இடம்பெற்ற கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்களை காத்தான்குடி பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள் 3 பேரையும் காத்தான்குடி பொலிஸார் கைது செய்துள்ளதுடன், 14 இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி ஏ.பி.வெதகெதர தெரிவித்தார்.

(பழுலுல்லாஹ் பர்ஹான்)