வட மாகாண தொழில்கோரும் பட்டதாரிகள் சங்கத்தின் உறுப்பினர்கள், இன்று காலை யாழ்ப்பாணத்தில் உள்ள வடமாகாண ஆளுனர் அலுவலகத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இதற்கு முன்னர் அவர்கள் ஆளுனர் அலுவலகத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்திய போது, ஒரு மாதக் காலத்துக்குள் அவர்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று ஆளுனர் அலுவலகத்தினால் உறுதியளிக்கப்பட்ட நிலையில் இரண்டு மாதங்கள் கடந்துள்ள போதும், இன்னும் தங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என தெரிவித்து, இந்த போராட்டத்தை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.