உடம்பில் வலியிருந்தால் அதனை மூளை உணரும். ஆனால் மூளையில் வலியிருந்தால்.. அதனை எப்படி குணப்படுத்தலாம், தற்போதைய சூழலில் இளம் வயதிலேயே பலர் பக்கவாதத்திற்கு ஆளாகிறார்கள். அதேபோல் மது மற்றும் போதைக்கும் அடிமையாகி விடுகிறார்கள்.
இந்நிலையில் இதற்குரிய சிகிச்சை அறிமுகமாகியிருக்கிறது என்கிறார் டொக்டர் சைமன் .
மது மற்றும் போதை பழக்கத்திலிருந்து மீளவே முடியவில்லை என்ற நிலையில் இருப்பவர்களுக்கு அவர்களின் மூளையினை பரிசோதித்து, பாதுகாப்புடன் எலக்ட்ரோ மைக்றோசிப்பைப் பொருத்தி அவர்களை அப்பழக்கத்திலிருந்து கட்டுப்படுத்தலாம். ஆனால் இது நோயாளிகளைப் பொறுத்து மாறுபடும்.
அதேபோல் மூளையில் இருக்கும் obstructive hydrocephalus என்று சொல்லப்படும் நீரோட்டத்தில் பாதிப்பு ஏற்பட்டால் அதற்கும் தற்போது நவீன சத்திர சிகிச்சை அறிமுகமாகியிருக்கிறது. இதன் போது நோயாளிகளின் மூளையில் உள்ள நீரோட்டம் பாதிக்கப்பட்டிருப்பதுடன், அதன் காரணமாக நரம்புகளும் பாதிக்கப்பட்டிருந்தால், அதனை நியுரோ எண்டாஸ்கோப்பிக் மூலம் துல்லியமாக கண்டறிந்து சிகிச்சையளிக்க இயலும். இதற்கு முன் இப்பிரச்சினைக்கு v.p shunt surgery என்ற சத்திர சிகிச்சையை மேற்கொண்டோம். இதன்போது தலையில் ஒரு துளையைப் போட்டு, அதன் வழியாக ஒரு குழாயைச் செலுத்தி அங்குள்ள நீரை வேறு வகையில்தான் இரத்தகுழாய் மூலம் அங்கிருந்து வெளியேற்றுவோம். ஆனால் நவீன நியுரோ எண்டாஸ்கோப்பிக் சத்திர சிகிச்சை மூலம் அந்த நீரை (obstructive hydrocephalus) அங்கிருந்து பை பாஸ் செய்து வெளியேற்றுகிறோம்.
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM