கல்முனை கொழும்பு பஸ் பயணிகள் இரவுவேளைகளில் பயணிக்கின்றபோது இடை நடுவில் உணவுக்காக நிறுத்தப்படும் இடங்களில் கொத்துரொட்டிக்கு அறவிடப்படும் பணம் குறித்து பயணிகளால் விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்முனையை அல்லது கொழும்பைப் பொறுத்தவரை சாதாரணமாக இறைச்சிக் கொத்துரொட்டி ஒன்றிற்கு 150ருபா அறவிடப்படுகிறது.

ஆனால் இடைநடுவில் உணவிற்காக நிறுத்தப்படும் வெளல்தெனிய, வறக்காபொல போன்ற இடங்களிலுள்ள சில கடைகளில் கொத்துரொட்டிக்காக 240 ருபா அறவிடப்படுகிறது.

கடைக்காரரிடம் இது தொடர்பில் கேட்டபோது இறைச்சி 1கிலோ 800ரூபா. ஆகவே  கொத்து ரொட்டியின்விலை இப்படித்தானிருக்கும் விரும்பினால் சாப்பிடுங்கள் என்று அலட்சியமாகக் கூறினார்.

பஸ் சாரதிகளும் இப்படிப்பட்ட கடைகளில்தான் நிறுத்துகின்றார்கள். அவர்களுக்கு அனைத்தும் இலவசம். ஆனால் அதனையும் சேர்த்து பயணிகளிடம் அறவிடுவது முறையா?

ஏன் இந்த கூடுதல் விலைவேறுபாடு? இதனை நுகர்வோர் அதிகார சபையினர் அல்லது விலைக்கட்டுப்பாட்டுச் சபையினர் கவனிப்பதில்லையா? எனப் பயணிகள் கேட்கின்றனர்.