அவுஸ்­தி­ரே­லிய – நியூ­ஸி­லாந்து அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்­டியில் ஆஸி. அபார வெற்­றி­பெற்­றது.இந்­தப்­போட்­டியில் முத­லா­வதாக துடுப்­பெ­டுத்­தா­டிய ஆஸி. 4 விக்­கெட்­டுக்கள் இழப்­புக்கு 556 ஓட்­டங்­களைக் குவித்து டிக்ளேர் செய்­தது. நியூ­ஸி­லாந்து தனது முதல் இன்­னிங்ஸில் 317 ஓட்­டங்­களில் ஆட்­ட­மி­ழந்­தது.


அதன்­பி­றகு 2ஆவது இன்­னிங்ஸை விளை­யா­டிய ஆஸி. 4 விக்­கெட்­டுக்கள் இழப்­புக்கு 264 ஓட்­டங்­களைப் பெற்று மீண்டும் டிக்ளேர் செய்­தது. இதனால் நியூஸி.க்கு 504 ஓட்­டங்கள் வெற்றி இலக்­காக நிர்­ண­யிக்­கப்­பட்­டது.


நேற்று போட்­டியின் 5ஆவது நாள் ஆட்­டத்தை தொடர்ந்த நியூ­ஸி­லாந்து அணி வீரர்கள் ஆஸி. வீரர்­களின் அபா­ர­மான பந்து வீச்சை சமா­ளிக்க முடி­யாமல் திண­றி­னார்கள். இறு­தியில் நியூஸி. 88.3 ஓவர்­களில் 295 ஓட்­டங்­களுக்கு சுருண்­டது.


இதனால் ஆஸி. 208 ஓட்­டங்கள் வித்­தி­யா­சத்தில் அபார வெற்றி பெற்­றது. இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்த ஆஸி.யின் வோர்னர் ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.
இந்த வெற்றி மூலம் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் அவுஸ்திரேலியா 1–0 என்ற கணக்கில் முன்னிலை யில் உள்ளது.