கத்தி வெட்டுக்காயங்களுடன் மாணவியொருவர்  மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

மறே, நூக்குவத்தை தோட்டத்தைச் சேர்ந்த  16 வயதான தேவிகா நல்லதண்ணி தமிழ் வித்தியாலயத்தில் கல்விப் பயிலும் மாணவியே கத்தி வெட்டுக்காயங்களுக்கு உள்ளாகிய நிலையில், மஸ்கெலியா வைத்தியசாலையில் இன்று காலை அனுமதிக்கப்பட்டாரென பொலிஸார் தெரிவித்தனர். 

இதுதொடர்பாக  மேலதிக விசாரணைகளை  மஸ்கெலியா   பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.