தலவாக்கலை - அட்டன் பிரதான வீதியில் தலவாக்கலை நகர சபைக்கு முன்பாக  இரு மோட்டார்  சைக்கிள்கள் மோதி விபத்துக்குள்ளானதில்  படுகாயமடைந்த  நிலையில் பெண் ஒருவர்  சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை - அட்டன் பிரதான வீதியில் தலவாக்கலை நகர சபைக்கு முன்பாக  இன்று காலை 8.30 மணியளவில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்குநேர்  மோதி  விபத்துக்குள்ளாகியதில் படுகாயமடைந்த நிலையில்  பெண் ஒருவர்  லிந்துல வைத்தியசாலையில்  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த மோட்டார் சைக்கிள் அதி வேகத்துடன் பயணித்ததோடு மோட்டார் சைக்கிளை செலுத்தியவருக்கு வாகன சாரதி அனுமதிப்பத்திரம் இல்லை என ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. 

விபத்து தொடர்பான விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.