யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் சென்ற இரு இளைஞர்கள் பெண்ணொருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கிவிட்டுச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

கிளிநொச்சியில் தர்மபுரம் வித்தியாலயத்தில் கல்வி கற்பிக்கும் ஆசிரியை மீதே குறித்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 

குறித்த பெண் ஆசிரியர் ஆபத்தான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இதுதொடர்பான  மேலதிக விசாரணைகளை  யாழ்ப்பாணம்  பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.