நல்­லாட்சி அர­சாங்­கத்தின் அமைச்­ச­ரவை மாற்றம் இன்று செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெ­ற­வுள்­ளது. காலை 10 மணி­ய­ளவில் ஜனா­தி­பதி செய­ல­கத்தில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் புதிய அமைச்­ச­ரவை பத­வி­யேற்க உள்­ளது. 

Image result for அமைச்­ச­ரவை மாற்றம்

அமைச்­ச­ரவை மாற்றம் இடம்­பெ­ற­வுள்­ள­மை­யினால் இன்­றைய தினம் காலை 9.30 மணி­ய­ளவில் ஜனா­தி­பதி செய­ல­கத்­துக்கு சமூ­க­ம­ளிக்­கு­மாறு அமைச்­ச­ரவை அந்­தஸ்­துள்ள அமைச்­சர்­க­ளுக்கு அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. ஜனா­தி­பதி செய­ல­கத்­தினால் இந்த அறி­விப்பு வெளி­யி­ட­ப­பட்­டுள்­ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்தின் நான்காவது மறுசீரமைப்பே இன்று இடம்பெறவுள்ளது.

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­வுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணைக்கு ஆத­ர­வாக சுதந்­திரக் கட்­சியைச் சேர்ந்த 16 உறுப்­பி­னர்கள் வாக்­க­ளித்­தி­ருந்­தனர். இவர்­களில் 6 பேர் அமைச்­ச­ரவை அந்­தஸ்­துள்ள அமைச்­சர்­க­ளாவர். பிரே­ர­ணைக்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்த சுதந்­தி­ரக்­கட்­சியைச் சேர்ந்த அமைச்­ச­ரவை அந்­தஸ்­துள்ள அமைச்­சர்கள், இரா­ஜாங்க அமைச்­சர்கள், பிரதி அமைச்­சர்கள் தமது பத­வி­க­ளி­லி­ருந்து இரா­ஜி­னாமா செய்­துள்­ள­துடன் எதி­ர­ணியில் அமர்­வ­தற்கும் நட­வ­டிக்கை எடுத்­துள்­ளனர்.

இத­னை­ய­டுத்து அமைச்­ச­ர­வையை மாற்­றி­ய­மைக்க வேண்­டிய நிலைமை ஏற்­பட்­டி­ருந்­தது. இதற்­கி­ணங்க அமைச்­ச­ரவை மாற்றம் தொடர்பில் ஜனா­தி­ப­தியின் செய­லாளர் ஒஸ்ரின் பெர்­ணாண்டோ, பிர­த­மரின் செய­லாளர் சமன் ஏக்­க­நா­யக்க ஆகி­யோ­ருக்­கி­டையில் கலந்­து­ரை­யாடல் இட­ம­பெற்­றது. தமிழ், சிங்­கள புத்­தாண்­டுக்கு முன்னர் அமைச்­ச­ரவை மாற்றம் இடம்­பெ­று­மென்று ஆரம்­பிக்­கப்­பட்­ட­போ­திலும் முழு­மை­யான மாற்றம் இடம்­பெ­ற­வில்லை. 

மாறாக நான்கு அமைச்­சர்­க­ளுக்கு மேல­தி­க­மாக புதிய பொறுப்­புக்கள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வினால் வழங்­கப்­பட்­டி­ருந்­தது. கடந்த 12ஆம் திகதி சரத் அமு­னு­கம திறன் அபி­வி­ருத்தி தொழில் தொழிற்­ப­யிற்சி மற்றும் விஞ்­ஞான தொழில்­நுட்ப ஆராய்ச்­சித்­துறை அமைச்­ச­ரா­கவும் ரஞ்சித் சியம்­ப­லாப்­பிட்­டிய இடர் முகா­மைத்­துவ அமைச்­ச­ரா­கவும் பைஸர் முஸ்­தபா விளை­யாட்­டுத்­துறை அமைச்­ச­ரா­கவும் மலிக் சம­ர­விக்­கி­ரம சமூக வலு­வூட்டல் நலன்­பேணல் மலை­நாட்டு மர­பு­ரி­மைகள் மற்றும் தொழில் உற­வுகள் அமைச்­ச­ரா­கவும் பதவிப் பிர­மாணம் செய்­து­கொ­ண­டனர். இவர்கள் நால்­வரும் தாம் வகித்த அமைச்சுப் பொறுப்­பு­க­ளுக்கு மேல­தி­க­மா­கவே இந்தப் பொறுப்­பு­களை எற்­றுக்­கொண்­டனர். 

சுதந்­திரக் கட்சி உறுப்­பி­னர்கள் வச­மி­ருந்த அமைச்சுப் பத­வி­களே இவ்­வாறு நான்கு பேரி­டமும் மேல­தி­க­மாக வழங்­கப்­பட்­டி­ருந்­தது. 

தற்­போ­தைய நிலையில் சிறி­லங்கா சுதந்­திரக் கட்சி உறுப்­பி­னர்கள் 16பேரின் பத­வி­க­ளுக்கு புதி­ய­வர்­களை நிய­மிக்­க­வேண்­டிய சூழ்­நிலை ஏற்­பட்­டி­ருக்­கின்­றது. சுதந்­தி­ரக்­கட்சி வச­மி­ருந்த சமுர்த்தி அமைச்சை தமக்கு வழங்­கு­மாறு ஐக்­கிய தேசியக் கட்சி கோரி­யுள்­ளது. தற்­போது அந்த அமைச்சு மலிக் சம­ர­விக்­கி­ர­ம­விடம் உள்­ளமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும். 

இது­போன்றே முன்னாள் அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்­கா­வுக்கும் அமைச்­ச­ரவை மாற்­றத்­தின்­போது புதிய அமைச்­சுப்­பொ­றுப்பு வழங்­கப்­பட வேண்­டு­மென்று ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலைமை கோரி­யுள்­ள­போ­திலும் அதற்கு ஜனா­தி­பதி இன்­னமும் பூரண இணக்கம் தெரி­விக்­க­வில்லை என்று தெரி­கின்­றது. 

இன்­றைய அமைச்­ச­ரவை மாற்­றத்­தின்­போது சிறி­லங்கா சுதந்­திரக் கட்சியைச் சேர்ந்த 6 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுக்களை வகித்தவர்களின்  பொறுப்புக்கள் சுதந்திரக்கட்சியைச் சேர்ந்த ஏனையவர்களுக்கு வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களுக்கிடையிலேயே இன்றைய அமைச்சரவை மாற்றத்தின்போது பொறுப்புக்கள் மாற்றப்படவுள்ளன. புதிதாக இராஜாங்க அமைச்சர்களுக்கோ பிரதி அமைச்சர்களுக்கோ பதவி மாற்றங்கள் இடம்பெறமாட்டாது என்றே தெரிகின்றது. 

அமைச்சரவை மாற்றம் குறித்து ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் பொதுச்­செ­ய­லாளர் மஹிந்த அம­ர­வீர கூறு­கையில்.

புதிய அமைச்­ச­ரவை மாற்­றங்கள் இடம்­பெ­ற­வுள்­ளது. இதில் அர­சாங்­கத்தை குழப்பும் வகை­யிலோ அல்­லது தற்­கா­லிக மாற்­றத்தை கொண்­டு­வரும் எந்த மாற்­றங்­களும் இடம்­பெ­றாது. தேசிய அர­சாங்­கத்தை தொடர்ந்தும் பல­மாக முன்­னெ­டுத்து செல்­லக்­கூ­டிய வகை­யிலும் நாட்டின் இஸ்­திரத் தன்­மை­யினை பலப்­ப­டுத்தும் வகை­யிலும் புதிய அமைச்­ச­ரவை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வினால் அமைக்­கப்­படும். நாளைய (இன்று) தினத்தில் இருந்து உருவாகும் அமைச்சரவை மூலமாக தேசிய அரசாங்கம் மேலும் பலமடையும். இதில் ஒரு தரப்பினருக்கு மட்டும் கை நீட்டி சுட்டிக் காட்டாது இரண்டு கட்சியும் இணைந்து ஒரே நேரத்தில் நாட்டினை முன்னெடுத்து செல்லும் வகையில் மாற்றங்களை உருவாக்கவுள்ளோம். அடுத்த இரண்டு ஆண்டுகள் தேசிய அரசாங்கம் முழுமையாக அதன் பணிகளை செய்து முடிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.