சர்வதேச தொழிலாளர் தினம் இன்று ஆனால் இலங்கையில் எதிர்வரும் 7 ஆம் திகதியே மே தினம் கொண்டாடப்படவுள்ளது.

வெசாக் வாரத்தை முன்னிட்டு, மே தினத்தை 7 ஆம் திகதி கொண்டாடுவதற்கு அரசாங்கம் அண்மையில் தீர்மானித்தது.

 எதிர்வரும் 7 ஆம் திகதி விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், அன்றைய தினம் மே தின நிகழ்வுகளில் கலந்து கொள்ளுமாறு அரசாங்கத்தினால் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களிடம் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.