யாழ். மாவட்டத்தில் உள்ளூர் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பஸ்கள் போட்டிக்கு செலுத்தப்படுவதால் விபத்துக்கள் ஏற்படுவதாக மக்கள் தெரிவித்துள்ளனர். 

தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தனமான பஸ்கள் போட்டிக்கு செலுத்தப்படுவதால் விபத்துக்கள் ஏற்படும் அபாயமுள்ளதுடன், பயணிகளை ஏற்றாமல் செல்கின்ற சந்தர்ப்பங்களும் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். 

விபத்துக்கள் ஏற்படுவதற்கு முன்னதாக அவற்றை தடுப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்.