நாளை மே மாதம் முதல் திகதி. உழைப்பாளர் தினமான நாளை தல ரசிகர்களுக்கு கொண்டாட்டம். ஏனெனில் தல அஜித்தின் பிறந்த நாள் மே 1. இந்த நாளில் தல ரசிகர்களுக்கு சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விருந்தளிக்கிறார். காலா படத்தில் இடம்பெற்ற பாடலான ‘செம வெயிட்டுடா...’ எனத் தொடங்கும் பாடல் நாளை வெளியாகிறது. இதனை தயாரிப்பாளரும், நடிகருமான தனுஷ் உறுதிப்படுத்தியிருக்கிறார்.

நாளை மாலை 7 மணியளவில் இந்த பாடல் வெளியாகிறது. அனைத்து பாடல்கள் அடங்கிய இசை வெளியீட்டு அடுத்த மாதம் 9 ஆம் திகதியன்று நடைபெறுகிறது.

சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியிருக்கும் இந்த பாடல் கபாலியில் இடம்பெற்ற ‘நெருப்புடா...’ போல் வெற்றி பெறும் இப்போதே ஆருடம் சொல்லத் தொடங்கிவிட்டார்கள் ரஜினி ரசிகர்கள்.