எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட ஒரு இளம்பெண் தனக்கு நோய் தாக்கிய விபரத்தை அறிந்திருந்தும், தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கிய ஆண்வர்க்கத்தை பழிவாங்கும் நோக்கத்தில் பலருடன் உடலுறவு கொண்டு, எய்ட்ஸ் நோயை பரவவிட்டதாக தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் அபுதாபி நகரில் இருவருடன் விபசாரத்தில் ஈடுபட்டபோது பொலிஸாரால் கைது செய்யப்பட்ட அந்தப் பெண் எந்த நாட்டை சேர்ந்தவர்? என்பதை வெளியிடாமல் உள்ளூர் அரபு நாளிதழான ‘அல்பயான்’ பத்திரிகையில் வெளியாகியுள்ள செய்தியில் மேற்கண்ட சம்பவம் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிபதியிடம் வாக்குமூலம் அளித்த அந்த 19 வயது இளம்பெண், எய்ட்ஸ் வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவரிடமிருந்து இந்த நோய் என்னை தொற்றிக் கொண்டது. நோய்த்தொற்று ஏற்பட்டிருப்பது தெரிந்தும் பல ஆண்களுடன் நான் உடல்ரீதியான தொடர்பு வைத்துக் கொண்டேன்.

என்னுடைய வாழ்க்கையை ஒருவன் சீரழித்ததுபோல், ஆண் வர்க்கத்தை சேர்ந்த பலரை சீரழிக்க நான் முயன்றேன் என கூறியுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.