இலங்கையின் முன்னணி மூலிகை அழகுசாதனப்பொருட்கள் உற்பத்தியில் ஈடுபடும் நிறுவனமான ReeBonn Cosmetics நிறுவனத்தின் தயாரிப்பான ReeBonn Premium Hair Growing and Scalp Nourishing  ஒயில், இலங்கையின் பாவனையாளர்கள் மத்தியில் அறிமுகம் செய்திருந்த தினத்திலிருந்து பெருமளவு வரவேற்பைப் பெற்றுள்ளது.

அண்மையில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற ‘‘Medicare Ayurveda Expo -2018’ விற்பனை கண்காட்சியின் போது கூந்தல் வளர்ச்சியை தூண்டுவதுடன் கூந்தல் உதிர்வை குறைக்கும் இந்த தயாரிப்புக்கு அதிகளவு வரவேற்பு காணப்பட்டது. 

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன கலந்து சிறப்பித்தார்.

‘Medicare Ayurveda Expo -2018’கண்காட்சி பெருமளவு உள்நாட்டு மற்றும் சர்வதேச ஆயுர்வேத பொருட்கள் உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் கொள்வனவாளர்களை கவர்ந்திருந்தது.

இந்த விற்பனை கண்காட்சி, யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்திலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன் யாழ்ப்பாண பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் மத்தியிலும் ReeBonn Premium Hair Growing and Scalp Nourishing ஒயில் பெருமளவு வரவேற்பை பெற்றிருந்தது.

2017இல் இலங்கைச் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டிருந்த இந்த தயாரிப்பு, முதனிலையான தேங்காய் எண்ணெய், ஒன்பது மூலிகைச் சேர்மானங்கள் மற்றும் விற்றமின் E ஆகியவற்றை கொண்டு உற்பத்தி செய்யப்படுகிறது. இளவயதில் கூந்தல் உதிர்வை குறைப்பதுடன், கூந்தல் வேரை செழுமையாக்கி கூந்தல் வளர்ச்சிக்கு உதவுகிறது.

விற்றமின் E க்கு மேலதிகமாக, இந்த எண்ணெயில் பெருமளவு மூலிகைச் சேர்மானங்கள் காணப்படுகின்றன. நீலாமரி (கூந்தலை அடர்த்தியாகவும், முழுமையாகவும் வளர உதவுவதுடன், கரும் நிறத்தையும் பளபளப்பான வர்ணத்தையும் வழங்கும்) பிரஹமி (அவசியமான ஈரப்பதனுடன் கூந்தல் வேர்களுக்கு புத்துணர்வை வழங்கும்), ஹென்னா (கூந்தல் கண்டிஷனராக அமைந்துள்ளது), கறிவேப்பிலை (கூந்தல் வேர்களை வலிமையடையச் செய்கிறது), நெல்லி (வரட்சியான தலை மேற்பரப்புகளுக்கு பொருத்தமானது), துளசி (குருதிச் சுற்றோட்டத்தை மேம்படுத்த உதவுவதுடன் தலைச் சருமத்தை குளிர்மையாக பேண உதவுகிறது), வெந்தயம் (கூந்தல் உதிர்வை கட்டுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது, செவ்வரத்தை (கூந்தல் வளர்ச்சியை உறுதி செய்கிறது) மற்றும் கீகிரிந்தி (கூந்தல் உதிர்வை தடுக்கிறது) போன்ற மூலிகைச் சேர்மானங்களை இந்த எண்ணெய் கொண்டுள்ளது.

ReeBonn Premium Hair growing and Scalp Nourishing ஒயில் தலைச்சருமத்துக்கு புத்துணர்வை வழங்கும் எண்ணெய் மூலமாக மேலும் பல பயன்களும் பாவனையாளர்களுக்கு வழங்கப்படுகின்றன. தலைவலி மற்றும் மன உளைச்சல்கள் ஏற்படுவதை தடுக்கிறது. கணனிகளில் பெருமளவு நேரம் வேலை செய்வோர் கண்களில் வலி ஏற்படுவது பற்றி முறையிடுவது வழமை. கண் வலிகள் ஏற்படுவதிலிருந்தும் இந்த எண்ணெய் பாதுகாக்கிறது.

‘Medicare Ayurveda Expo -2018’ விற்பனை கண்காட்சியில் ReeBonn Premium Hair Growing and Scalp Nourishing ஒயிலுக்கு கிடைத்திருந்த வரவேற்பு தொடர்பில் ReeBonn Cosmetic முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.சிவராஜா கருத்துத் தெரிவிக்கையில்,

 தனது நிறுவனத்தின் புதிய தயாரிப்பு வடிவமைப்பு பிரிவு, கூந்தல் வளர்ச்சியை உறுதி செய்யும் மூலிகை கூந்தல் எண்ணெய்க்கான தேவையை இனங்கண்டிருந்தது. இதன் காரணமாக அவ்வாறான தயாரிப்பை உற்பத்தி செய்வதற்கான ஆய்வு நடவடிக்கையை பல ஆண்டுகளாக முன்னெடுத்திருந்தது.

முகாமைத்துவ பணிப்பாளர் தெரிவிக்கையில்,

 “இந்த தயாரிப்பு தொடர்பில் நாம் பத்து ஆண்டுகளாக பரிசோதனைகளை முன்னெடுத்திருந்தோம். அதன் பெறுபேறாக ReeBonn Premium Hair growing and Scalp Nourishing ஒயில் உற்பத்தி செய்யப்படுகிறது. தயாரிப்பை உற்பத்தி செய்யும் போது, இளவயதில் கூந்தல் உதிர்வதை தவிர்த்தல் மற்றும் இளநரையை தவிர்த்தல் குறித்து கவனம் செலுத்தப்படுகிறது. இந்த தயாரிப்பை உற்பத்தி செய்யும் போது பழங்காலத்தில் பரிந்துரைக்கப்பட்ட மூலப்பொருட்களை பயன்படுத்தி வருகிறோம். கூந்தல் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும் பல எண்ணெய் வகைகள் உணக்கிய தேங்காயிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. ஆனாலும் நாம் முதனிலையான தேங்காய் எண்ணெயிலிருந்து தயாரிப்புகளை மேற்கொள்கிறோம். இதில் கொழுப்பு அடங்கியிருப்பதில்லை. இது சிகையினுள் மூலிகைகளை ஊடுருவ உதவுவதுடன் வலிமைப்படுத்தவும் உதவுகிறது. அனைத்து சேர்மானங்களும் ஆயுர்வேதப்பொருட்களாக அமைந்துள்ளன. எனவே, ReeBonn Premium Hair growing and Scalp Nourishing எண்ணெயினால் கூந்தலுக்கு செழுமை சேர்க்கப்படுவதுடன், பளபளப்பும் வழங்கப்படுகிறது.

இந்த தயாரிப்பு அறிமுகம் செய்யப்பட்டது முதல் இலங்கையின் பெண்கள் மத்தியில் பெருமளவு வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக ‘Medicare Ayurveda Expo - 2018’ விற்பனைக் கண்காட்சிக்கு விஜயம் செய்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டவர்கள் இந்த தயாரிப்பின் மீது அதிகளவு ஈடுபாட்டை வெளிப்படுத்தியிருந்தனர்.

2005 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட ReeBonn கொஸ்மெடிக்ஸ் பிரைவட் லிமிடெட், பரந்தளவு மூலிகை அழகுசாதன தயாரிப்புகளை உற்பத்தி செய்து விநியோகித்து வருகிறது. இவற்றுக்கு சிறந்த கேள்வியும் சந்தையில் காணப்படுகிறது. இந்நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்படும் மூலிகைப்பொருட்களில், shampoo, silicon conditioner, Rinsing conditioner, Black henna, Face wash, Fairness cream, Body soap மற்றும் Hand wash liquids போன்றன அடங்கியுள்ளன. ReeBonn கொஸ்மெடிக்ஸ் தயாரிப்புகள் ஜப்பான், இந்தியா, மத்திய கிழக்கு மற்றும் மாலைதீவுகள் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.