மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து ஐந்து கைதிகள் பொதுமன்னிப்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை விடுதலை செய்யப்பட்டனர்.

வெசாக் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி வழங்கிய பொது மன்னிப்பின் கீழ் மட்டக்களப்பு சிறைச்சாலையில் பல்வேறு குற்றங்களுக்காக தண்டனை பெற்று வந்த ஐந்து கைதிகள் இதன்போது பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு சிறைச்சாலையின் பிரதம அத்தியட்சகர் கே.எம்.எச்.யு.அக்பர் தெரிவித்தார்.

இந்தக் கைதிகள் மட்டக்களப்பு சிறைச்சாலையின் பிரதம அத்தியட்சகர் கே.எம்.எச்.யு.அக்பர் மற்றும் மட்டக்களப்பு சிறைச்சாலையின் பதில் சிறைக்காவலர் கே.மோகன்ராஜ் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள், சிறைச்சாலை நலன்புரி உத்தியோகத்தர்கள் முன்னிலையில் விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.