பொலன்னறுவைப் பகுதியைச் சேர்ந்த நான்கு பேர் போலி நாணயங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவை சுங்காவில் பகுதியைச் சேர்ந்த குறித்த நான்கு பேர் 5000 ரூபாய் போலி நாணயத்தாள் பதினொன்றுடன் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஓட்டமாவடி எரிபொருள் நிலையத்தில் தமது வாகனத்திற்கு எரிபொருள் நிரப்பியதன் பின்னர் நாணயத்தாளை வழங்கும் பொழுது எரிபொருள் நிலைய ஊழியர் இது போலி நாணயத்தாள் என அறிந்து பொலிஸாருக்கு  தெரிவித்ததன் பேரிலேயே குறித்த நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்த மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.