நடிகர் கார்த்தி, அறிமுக இயக்குநர் ரஜத் ரவிசங்கர் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத புதிய படத்தின் படபிடிப்பில் பங்குபற்றி வருகிறார்.

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் தயாராகும் "கடைக்குட்டி சிங்கம்" படத்தின் படபிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது. அதைத் தொடர்ந்து கார்த்தி ஏற்கனவே தொடங்கப்பட்ட அறிமுக இயக்குநர் ரஜத் ரவிசங்கரின் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க தொடங்கியிருக்கிறார்.

சென்னையில் ஆரம்பித்திருக்கும் இந்த படத்தின் படபிடிப்பு விரைவில் ஹைதராபாத் மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் பயணித்து முடிவடையுமாம். சாகச பயணத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த கதையில் கார்த்திக்கு ஜோடியாக ராகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார்.