நாட்டின் பல பிரதேசங்களிலிருந்து சிவனொளிபாதமலையினை தரிசிப்பதற்காக சென்ற 7 பேரிடமிருந்து நேற்று  இரவு கஞ்சா பக்கட்களை  ஹட்டன் குற்றத்தடுப்பு விசேட பிரிவினரால் “கோரா” என்ற மோப்ப நாயின் உதவியுடன் கைப்பற்றப்பட்டுள்ளது.

ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனை தியகல பகுதியில் நேற்று இரவிலிருந்து இன்று காலை வரை வாகனங்களை ஹட்டன் குற்றத்தடுப்பு விசேட பிரிவினர் சோதனை செய்தனர். இதன்போது 7 பேரிடமிருந்து 6,900 மில்லி கிராம் கஞ்சா பக்கட்கள் கண்டு பிடிக்கப்பட்டன.

இதனையடுத்து குறித்த 7 பேரையும் கைது செய்த ஹட்டன் குற்றத்தடுப்பு விசேட பிரிவினர், ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்செய்ய நடவடிக்கைகள் எடுத்திருப்பதாகத் தெரிவித்தனர்.