உணவுப்பொருட்களின் விலையை அதிகரிக்க நடவடிக்கை: இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம்

Published By: Daya

28 Apr, 2018 | 03:45 PM
image


 சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பிற்கு அமைய, உணவுப்பொருட்களின் விலையையும் அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பினால் வைத்தியசாலைகள், அரச நிறுவனங்களிலுள்ள சிற்றுண்டிச்சாலைகள் அதிகமான பாதிப்பை எதிர்நோக்குவதாக சங்கத்தின் தேசிய அமைப்பாளர் அசேல சம்பத் தெரிவித்தார்.

இதன் காரணமாக, சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பிற்கு இணையாக, உணவுப்பொருட்களின் விலையை அதிகரிக்குமாறு அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

சமையல் எரிவாயுவிற்கான விலையை நேற்று  நள்ளிரவு முதல் அதிகரிப்பதற்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எரிவாயு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.
இந்த அனுமதிக்கு அமைய, 12.5 கிலோகிராம் நிறையுடைய எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 245 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 1676 ரூபாவாக உயர்வடைந்துள்ளது என தெரிவத்துள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31