இந்தியாவின்  ஜார்கண்ட் மாநிலத்தில் சத்ரா என்ற பகுதியில் தனியார் வைத்தியசாலையில் வைத்தியர் ஒருவர் பிறந்த ஆண் குழந்தையின் பிறப்புறுப்பை வெட்டி கொலை செய்துள்ள சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அனில் பான்டா என்பவர் தனது 8 மாத கர்ப்பிணி மனைவியை தனியார் வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அந்த தனியார் வைத்தியசாலையின் வைத்திய அருண்குமார் பான்டாவின் மனைவியின்  சிகிச்சைக்காக மற்றொரு வைத்தியசாலைக்கு செல்ல அறிவுறுத்தியுள்ளார். அதன்படி பான்டாவும் வேறு வைத்தியசாலைக்கு அழைத்து சென்றுள்ளார்.

அங்கே அவரது மனைவிக்கு கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என்று கண்டறியும் ஸ்கேன் எடுக்கப்பட்டுள்ளது. அந்த ஸ்கேன் முடிவில் பான்டாவின் மனைவிக்கு பெண் குழந்தை பிறக்கும் என கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் அவரது மனைவிக்கு ஸ்கேன் முடிவிற்கு மாறாக ஆண் குழந்தை பிறந்தது. இதனால் கோபமடைந்த வைத்தியர் அந்த ஆண் குழந்தையின் பிறப்புறுப்பை வெட்டி கொலை செய்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக வைத்தியர் அருண்குமார் மற்றும் குழந்தையை கொலை செய்த வைத்தியர் ஆகியோர் மீது பொலிஸார் வழக்குப் பதிவு செய்து தலை மறைவாயிருக்கும் அவர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.