சூரியவெவவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 10 வயது சிறுமியொருவர்  உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


சூரியவெவ நோக்கி பயணித்த மோட்டார்  வாகனமொன்று  ஓட்டுநரின் கட்டுப்பாட்டையிழந்து சிறுமியொருவர் பாதையை கடக்கும் போது மோதியதில் நேற்றிரவு இந்த விபத்து இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சூரியவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 10 வயதான சிறுமிரொருவரே இவ்வாறு மோட்டார்  வாகனத்தில் மோதுண்டு உயிரிழந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனைக்குட்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

சம்பவம் தொடர்பில் மோட்டார்  வாகன ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.