பாகிஸ்தானில் குழந்தைகளை வைத்து ஆபாச படம் எடுத்த நபருக்கு சிறை!!!

By Sindu

28 Apr, 2018 | 02:36 PM
image

பாகிஸ்தானை சேர்ந்த நபர் ஒருவர் குழந்தைகளை வைத்து ஆபாச படம் எடுத்த வழக்கில் 7 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானை சேர்ந்த அமீன் என்ற நபர் குழந்தைகளை மையமாக வைத்து ஆபாச படம் எடுத்து அதை ஐரோப்பா நாடுகளில் பரப்பியதாக நோர்வே தூதரகம் அமீன் மீது புகார் அளித்தது.

முறைப்பாட்டின் அடிப்படையில் அமீன் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட போது அமீனிடம் 6 இலட்சம் ஆபாச வீடியோக்கள் இருந்துள்ளது.

பின்னர் அவரது வழக்கு லாகூர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. அந்த விசாரணையில் அமீன் மீதான குற்றசாட்டு நிரூபிக்கப்பட்டு அவருக்கு 7 ஆண்டுகள் சிறைதண்டனை மற்றும் 12 லட்சம் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்பளித்தது.

கடந்த ஆண்டு பாகிஸ்தானில் குழந்தைகளை வைத்து ஆபாச படம் எடுப்பது  குற்றம் என சட்டம் பிறப்பிக்கப்பட்டது. அந்த சட்டத்தில் சிறைக்கு செல்லும் முதல் நபர் அமீன் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right