மே மாதம் முதலாம் திகதி தொழிலாளர் தின நிகழ்வுகள் நடத்த தடைசெய்யப்பட்டாலும்,  அன்றைய தினம் மேதின ஊர்வலத்தை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக முன்னணி சோஷலிசக் கட்சி தெரிவித்துள்ளது.

அத்துடன், உரிய தரப்பினரிடம் கருத்துக் கேட்காமல் மே மாதம் முதலாம் திகதி தொழிலாளர் தின நிகழ்வுகளை நடத்த அரசாங்கம் தன்னிச்சையாக நடவடிக்கை எடுத்துள்ளதாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் புபுது ஜாகொட தெரிவித்துள்ளார். 

இலங்கை சுதந்திர சேவையாளர் சங்கம், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மே தின ஊர்வலத்தில் பங்கேற்காமல், தனியான மே தின பேரணியை மே மாதம் முதலாம் திகதி முன்னெடுக்க தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும், மே தின பேரணியை மே மாதம் முதலாம் திகதி நடத்துவதற்கு ஜே.வி.பி தீர்மானித்துள்ளது.

வெசாக் நிகழ்வுகளுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் இந்தப் பேரணியை யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.