லிற்றோ மற்றும் லாப் சமையல் எரிவாயுக்களின் விலைகள் நேற்று நள்ளிரவு முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளதால் நுகர்வோர் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில் 12.5 கிலோ கிராம் லிற்றோ சமையல் எரிவாயு சிலின்டர் ஒன்றின் விலை 245 ரூபாவினால் அதிகரிக்கப்படுவதாக லிற்றோ கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இதேவேளை, 12.5 கிலோ கிராம் லாப் சமையல் எரிவாயு சிலின்டர் ஒன்றின் விலை 245 ரூபாவினால் அதிகரிக்கப்படுவதாக லாப் கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், விலை அதிகரிப்பிற்கான அனுமதி நுகர்வேர் அதிகார சபையால் கிடைக்கப்பெற்றுள்ளதாக லாப் மற்றும் லிற்றோ கேஸ் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இவ்வாறு திடீரென ஒரே இரவில் சமையல் எரிவாயுவின் விலை 245 ரூபாவால் அதிகரித்தமையானது தமக்கு பெரும் பொருளாதார நெருக்கடிகளை தோற்றுவித்துள்ளதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.