தெற்கு அதிவேக வீதியில் இன்று காலை இடம்பெற்ற பஸ் விபத்தில் 10 க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் கராப்பிட்டிய மற்றும் எல்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கதிர்காமத்திற்கு யாத்திரைக்காக சென்றுகொண்டிருந்த குறித்த தனியார் பஸ் வண்டியானது பத்தேகம, பின்னதுவ பகுதிக்கிடையில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

சம்பவத்தின் போது பஸ்ஸில் 17 பேர் பயணித்துள்ள நிலையில் அதில் காயமடைந்தோர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில் குறித்த விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.