விவசாய பயிர் செய்கை நடைமுறைகளுக்கு விசேட சான்றிதழ் ஒன்றை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

மரக்கறி மற்றும் பழச் செய்கைகள் தொடர்பாக இதில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த திட்டத்தின் கீழ் சிறந்த பயிர் செய்கை நடவடிக்கைகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட உள்ளதாக அரசாங்க தகவல் இணையம் தெரிவித்துள்ளது.

குறித்த திட்டத்தின்  மூலம் சிறந்த உற்பத்திகளை நியாயமான விலைக்கு சந்தைக்கு வழங்கலாம் என அரசாங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.