சவூதி அரேபியாவில், கடந்த நான்கு மாதங்களில் மட்டும் 48 பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

கொலை, கொள்ளை, பாலியல் வல்லுறுவு மற்றும் போதை பொருள் கடத்தல் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களுக்கே மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2014ஆம் ஆண்டு முதல் சவூதி அரேபியாவில் 600க்கும் மேற்பட்டவர்களின் தலை துண்டிக்கப்பட்டு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.

கொலை தவிர்ந்த ஏனைய குற்றச்செயல்களுக்காக வழங்கப்பட்டுள்ள மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என  சவூதி அரேபிய இளவரசர் முஹமது பின் சல்மான் தெரிவித்துள்ளார்.