ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி அடைவதன் காரணமாக வெளிநாட்டிலிருந்து பெற்றுக்கொண்ட கடன் தொகை அதிகரிக்கும் என வெளியிடப்படும் தகவல்கள் அடிப்படையற்றவை என இராஜாங்க அமைச்சர் ஹர்ஷ டி சில்வா  நேற்று தெரிவித்துள்ளார்.

வீழ்ச்சியான பொருளாதார வேகத்தில் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

எனவே, அரசாங்கம் இதனை ஏற்றுக்கொண்டு தேர்தலை நடத்தி, நாட்டை மீண்டும் கட்டி எழுப்பக் கூடிய தரப்பினருக்கு நாட்டை கையளிக்க வேண்டியதன் அவசியமே இதனூடாக வெளிப்படுவதாவும் தெரிவித்துள்ளார்.