சினிமா பைனான்சியர் போத்ரா தொடர்ந்த அவதூறு வழக்கில், நடிகர் ரஜினிகாந்த் ஜுன் 6 ஆம் திகதி நேரில் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த குற்றச்சாட்டு தன்னுடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளதாகக் கூறி, நடிகர் ரஜினிகாந்துக்கு எதிராக அவதூறு வழக்கை சென்னை ஜோர்ஜ் டவுன் நீதிமன்றில் போத்ரா தாக்கல் செய்ததையடுத்து.

குறித்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஜுன் 6 ஆம் திகதி ரஜினிகாந்த் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

சென்னையை சேர்ந்த சினிமா பைனான்சியர் முகுந்சந்த் போத்ரா, திரைப்பட இயக்குனரும், நடிகர் தனுஷின் தந்தையுமான கஸ்தூரி ராஜாவுக்கு எதிராக காசோலை மோசடி வழக்குத் தொடர்ந்தார்.

அதில், நடிகர் ரஜினிகாந்தின் ஒப்புதலுடன் தான் கஸ்தூரி ராஜாவுக்கு கடன் கொடுத்ததாகக் தெரிவித்துள்ளார்.

குறித்து அறிக்கை வெளியிட்ட ரஜினிகாந்த், தன்னிடம் பணம் பறிக்க முகுந்சந்த் போத்ரா முயற்சிக்கிறார் என  தெரிவித்ததமை தன்னுடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளதாகக் கூறி, நடிகர் ரஜினிகாந்துக்கு எதிராக அவதூறு வழக்கை சென்னை ஜோர்ஜ் டவுன் நீதிமன்றில் போத்ரா தாக்கல் செய்தார்.

 குறித்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஜுன் 6 ஆம் திகதி ரஜினிகாந்த் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.