வெசாக் பௌர்ணமி தினத்தில் யாத்திரீகர்களின் வசதிக்காக கொழும்பு கோட்டையில் இருந்து அனுராதபுரம் வரை விஷேட ரயில் சேவைகள் இடம் பெறவுள்ளது.

இதற்கமைய நாளை பிற்பகல் 1 மணிக்கு விசேட  ரயில் ஒன்று கொழும்பு கோட்டையிலிருந்து அனுராதபுரம் வரையும் மாலை 6.40 மணிக்கு மற்றுமொரு ரயில் அனுராதபுரத்தில் இருந்து கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தை வந்தடையும் என ரயில் கட்டுப்பாட்டு மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் வெசாக் பௌர்ணமி தினத்தன்றும் அதனைத் தொடர்ந்த மறு நாளும்  இந்த விசேட ரயில் சேவைகள் இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.