மட்டக்களப்பு மாநகர சபை பிரதேசத்திற்குட்பட்ட திராம்மடு சுவிஸ் கிராமத்திலிருந்து ஒரு தொகை ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இன்று பகல் 11.45 மணியளவில் பொலிஸ் விசேட பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் தோட்டமொன்றினுள் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இவ்ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. 

ரி.56 ரக துப்பாக்கி ஒன்று, கைத்துப்பாக்கி ஒன்று, 30 துப்பாக்கி ரவைகள், 1 ரைக்கூடு என்பனவே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன. 

மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். 

- ஜவ்பர்கான்