மொனராகலை - சியம்பலாண்டுவ  பகுதியில் கூரிய ஆயுதத்தில் தாக்கி பெண் ஒருவர் கொலை  செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Crime

சம்பவத்தில் 28 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் தற்போது விஷம் அருந்திய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.