(நா.தினுஷா)

 மே தின கொண்டாட்ட காலப்பகுதியில் இலங்கைக்கு விஜயம் செய்யும் அமெரிக்க பிரஜைகளுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பில் அமெரிக்க தூதரகம் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, 

உலக தொழிலாளர் தினத்தினை அரசாங்கம் மே மாதம் 7 ஆம் திகதிக்கு பிற்போட்டதை தொடர்ந்து எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி தொடக்கம் 7 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிகளில் நாட்டில் பேரணிகள் மற்றும் பிரசார கூட்டங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்களும் அதிகமாக காணப்படுகின்றன. 

இவ்வாறான சந்தர்ப்பங்களில் இலங்கை வரும் அமெரிக்க பிரஜைகள் பாதுகாப்புடன் செயற்படுமாறும் பேரணிகள் மற்றும் கூட்டங்களில் பங்குப்பற்றுவதை தவிர்த்து கொள்ளுமாறும் கேட்டு கொண்டுள்ளது.