மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி விவகாரத்தில் பிரதான சந்தேக நபரான இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை கைது செய்ய  சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலை யில், சர்வதேச பொலிஸில் அங்கம் வகிக்கும் 192 நாடுகள் ஊடாக அவரைக் கைது செய்ய முடியும் என சட்ட மா அதிபர் சார்பில் நேற்று கோட்டை நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டது. 

இந்த 192 நாடுகளில் ஏதேனும் ஒரு நாட்டில் அர்ஜுன் மகேந்ரன் சிவப்பு அரிவித்தல் பிரகாரம் கைது செய்யப்பட்டால் அவரை உடனடியாக கைதிகள் பறிமாற்றம் ஊடாக நாட்டுக்கு அழைத்துவர தேவையான ஆவணங்களை தயார் செய்ய, கோட்டை நீதிமன்றில் உள்ள பிணை முறி மோசடி வழக்கின் கோவையையும் நேற்று நீதிவானின் உறுதிப்படுத்தலுடன் குற்றப் புலனாய்வுப் பிரிவு பெற்றுக்கொண்டது.

மத்திய வங்கி பிணை முறி மோசடி விவகாரம் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் நேற்று கோட்டை நீதிவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. 

இதன்போது மன்றில் விசாரணையாளர்கள் சார்பில், குற்றப் புலனயவுப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சர் பியசேன அம்பாவவ,  குற்றப் புலனாய்வுப் பிரிவின்  மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பிலான விசாரணை அதிகாரியுமான பெண் பொலிஸ் பரிசோதகர் தமலதா சஞ்ஜீவனீ, உப பொலிஸ் பரிசோதகர் விமல் ஜயவீர ஆகியோருடன் மன்றில் ஆஜரான சட்ட மா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட சட்டவாதி லக்மினி ஹிரியாகம மற்றும் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் ஹரிப்பிரியா ஜயசுந்தர ஆகியோர் சார்பில் மன்றில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

 இதன்போதே பிரதி சிலொசிட்டர் ஜெனரால் ஹரிப்பிரியா ஜயசுந்தர, முன்வைத்த கோரிக்கையை கருத்தில் கொண்டு, அர்ஜுன் மகேந்தரனை  கைதின் பின்னர் நாடடுக்கு அழைத்து வரும்  நோக்குடன் ஆவணங்களை தயார்  செய்ய நீதிவானினால் சி.ஐ.டி.க்கு கோட்டை நீதிமன்றில் உள்ள பினை முறி மோசடி வழக்கின் கோவைகளின் உண்மை பிரதிகள் கையளிக்கப்பட்டன.

 இதனைவிட பிணை முறி மோசடி விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழு முன்னெடுத்த விசாரணைகளின் போது வெளிப்படுத்தப்பட்ட தொலைபேசி அழைப்புக்கள் மற்றும் குறுஞ் செய்தி  பறிமாற்றங்கள் தொடர்பில் இடம்பெறும் விசாரணைகளில் குற்றப் புலனாய்வுப் பிரிவு நீதிமன்ற உத்தரவூடாக கோரிய பல தகவல்களை நேற்று வரை தொலைபேசி சேவை வழங்குனர் நிறுவனங்கள் வழங்க தவறியுள்ளமையையும் அதற்காக அந் நிறுவனங்கள் பல்வேறு காரணங்களை முன்வைத்துள்ளமையையும்  பிரதி சொலிசிட்டர் ஜெனரால் ஹரிப்பிரியா ஜயசுந்தர வெளிப்படுத்தினார்.

 வழக்கானது நேற்று ஆரம்பித்தபோது தற்போது கைது செய்யப்பட்டுள்ள 2 ஆம் சந்தேக நபர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் நான்காம் சந்தேக நபரான கசுன் பலிசேன ஆகியோர் சிறைக் காவலர்கள் ஊடாக மன்ரில் ஆஜர்ச் செய்யப்பட்டனர். அவர்கள் சார்பில் மன்ரில் ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்திரதிஸ்ஸ மன்றில் ஆஜரானார். அவர் முதலில் இந்த வழக்கின் 3 ஆம் சந்தேக நபராக பெயரிடப்ப்ட்டுள்ள பேப்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனம் சார்பில் குற்றவியல் சட்டத்தின் 261 ஆவது உருப்புரைக்கு அமைய அந் நிறுவனத்தில் இருந்து ஒரு பிரதி நிதி ஆஜராக வேண்டும்  என்பதற்கமைய, அது  நிறுவனம் தொடர்பில் இரண்டாம் சந்தேக நபர் அர்ஜுன் அலோசியஸ் ஆஜராக அனுமதிக்க வேண்டும் எனக் கோரி வாதிட்டார். இதற்கான சட்ட நடைமுறைகள் தொடர்பில் அவர் கருத்துக்களை முன்வைத்த நிலையில் அது தொடர்பில் எழுத்து மூலம் மன்றைக் கோர நீதிவான் அவருக்கு அறிவுறுத்தல் விடுத்தார்.

 இந் நிலையில்  குற்றப் புலனாய்வுப் பிரிவின் மேலதிக அறிக்கையை மையப்படுத்தி, பிரதி சொலிசிட்டர் ஜெனரால் ஹரிப் பிரியா ஜயசுந்தர மன்றில் கருத்துக்களைப் பதிவு  செய்கையில்  

'கடந்த மார்ச் மாதம் நாம் நீதிமன்றிடம் இருந்து பெற்றுக்கொண்ட உத்தர்வுகளுக்கு அமைய c 350 எனும் ஆவணத்தில் உள்ள தொலைபேசி இலக்கங்கள், அதிலிருந்து உள் வந்த வெளிச் சென்ற அழைப்புக்கள் குறுஞ்செய்திகள் தொடர்பில் பகுப்பாய்வு அரிக்கையை நாம் தொலைபேசி சேவை வழ்னக்குநர் நிருவனங்களிடம் இருந்து கோரியிருந்தோம்.

அதன் படி டெலிகொம் நிறுவனம் சில தொலைபேசி இலக்கங்கள் தொடர்பில் அறிக்கையை வழங்கியுள்ளது. எனினும் பல இலக்கங்கள் தொடர்பிலான அறிக்கை கிடைக்க வேண்டியுள்ளது. எனினும்  தொழில் நுட்ப சிக்கல் காரணமாக அவற்றை பெற முடியாது என டெலிகொம் அறிவித்துள்ளது.

 இந் நிலையில் அந்த தகவல்களை பெறுவது தொடர்பில் குற்றப் புலனயவுப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

 அதே போன்று டயலொக் நிறுவனம், குறித்த தொலைபேசி இலக்கங்கள் தொடர்பில் உள் வந்த வெளிச் சென்ற அழைப்புக்கள்  தொடர்பிலான அறிக்கையை சமர்பித்துள்ளது. எனினும் குறுஞ்செய்திகள் அதில் உள்ளடக்கம் ஆகியவற்றை சமர்பிக்க முடியாதுள்ளதாக அறிவித்துள்ளது. மொபிடல் நிறுவனமும்  இதே அறிவிப்பையே செய்துள்ளது. எட்டிசலாட் நிறுவனம் குறுஞ்செய்திகள், அதன் உள்ளடக்கத்தை வழங்க்க சிரிது கால அவகாசம் தேவை என அறிவித்துள்ளது. அதன்படி தொலைபேசி இலக்கங்கள் குறித்த பகுப்பாய்வில்  இதுவரை கிடைக்கப் பெற்றுள்ள விடயங்களை மையபப்டுத்தி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், பெறப்பட வேண்டிய தகவல்களை எவ்வாறு பெற முடியும் என்பது தொடர்பில் குற்றப் புலனயவுப் பிரிவு அவதானம் செலுத்தியுள்ளது.

அத்துடன் இந்த விவகாரத்தில் முதல் சந்தேக நபரை கைது செய்ய  திறந்த பிடியாணை பிறப்பித்துள்ளீர். குற்றப் புலனயவுப் பிரிவு சர்வதேச பொலிஸார் ஊடாக முன்னெடுத்த நடவடிக்கையில் தற்போது அவருக்கு எதிராக  சிவப்பு அரிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. சர்வதேச பொலிஸில் 192 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. எனவே அர்ஜுன் மகேந்ரன் அந்த 192 நாடுகளில் எதில் இருந்தாலும் கைது செய்ய முடியுமான சூழல் உள்ளது.

 அவர் கைது செய்யப்ப்ட்டால் கைதியாக கருதி அவரை நாடுகடத்தும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். அப்படியானால் அதற்கான ஆவணங்களை நாம் தயார்ச் செய்கின்றோம். அதற்கு இ ம்மன்றில் விசாரணையில் உள்ள இவ்வழக்கின் கோவைகள் தொடர்பிலான உண்மை பிரதிகள் எமக்கு அவசியம்.. அவற்றை குற்றப் புலனயவுப் பிரிவுக்கு கையளிக்குமாரு கோருகின்றோம். ( இந்த கோரிக்கைக்கு அனுமதி கிடைத்தது)

 அத்துடன் பேப்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் ஊடாக அதன்  கீழ்  உள்ள ஒரு நிறுவனமான மெண்டிஸ் நிறுவனத்துக்கு பணம் வழ்னக்கப்ப்ட்டுள்ளது. இது தொடர்பில் எமக்கு அறீக்கை தேவைப்படுகின்றது. இது குறித்து அடுத்த தவணையில் விஷேட கோரிக்கையை மன்றில் முன்வைக்கின்றேன். 

 அத்துடன்  பேப்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் வருமானம், செலவு தொடர்பில் தேசிய வருமான வரி தினைக்களத்திடமிருந்து தகவல்களைப் பெற்றுக்கொடுக்க நீதிமன்றம் அத்திணைக்கள ஆணையாளர் நாயகத்துக்கு உத்தர்விட வேண்டும். என்றார். இருதி கோரிக்கை தொடர்பில் அடுத்த வழக்குத் தவணையில் சட்ட நுணுக்கங்களை ஆரயந்து உத்தர்விடுவதாக அரிவித்த நீதிவான் லங்கா ஜயரத்ன, வழக்கை  எதிர்வரும் மே 10 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்ததுடன் அதுவரை அர்ஜுன் அலோசியஸ், கசுன் பலிசேன ஆகிய சந்தேக நபர்களை  விளக்கமறியலில் வைக்கவும் உத்தரவிட்டார்.