பொலன்னறுவையில்  30 மில்லியன் கப்பம் தரம் வேண்டும் இல்லாவிடின் பிள்ளைகளை கொன்றுவிடுவோம்  என  தொலைபேசியில் நபரொருவர் மிரட்டியதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவை அரிசி ஆலையின் தொழிலதிபரின் இரு பிள்ளைகளையும் கடத்தி 30 மில்லியன் கப்பம் கேட்டு தொலைபேசி மிரட்டல் விடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலும் தெரிவித்ததாவது,

குறித்த நபர் தொழிலதிபரை அச்சுறுத்தி,  பணத்தை பெற்று கொண்டு தப்பி ஓடியுள்ளமை பொலிஸ் விசாரணையின் போது தெரியவந்துள்ளது.