இலங்கையின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு மேலும் ஆதரவினை வழங்க கனடா தயாராகவுள்ளதாக நேற்று தெரிவித்துள்ளது.

இலங்கைவந்துள்ள கனடாவின் தென்னாசிய மற்றும் பூகோள விவகார பணிப்பாளர் நாயகம் டேவிட் ஹார்ட்மென் மற்றும் இலங்கைக்கான கனடாவின் தூதுவர் டேவிட் மெக்கினன் உள்ளிட்டவர்கள், நேற்று நிதி அமைச்சர் மங்கள சமரவீரவை சந்தித்திருந்தனர்.

இதன் போது கனடாவின் வணிக நடவடிக்கைகளை இலங்கையில் விஸ்த்தரிப்பது, முதலீடுகள் மற்றும் மறுசீரமைப்பு செயற்பாடுகளின் கனடாவின் பங்களிப்பை விரிவாக்குவது போன்ற விடயங்கள் குறித்து இந்த சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.