வவுனியா - சூசைப்பிள்ளையார்குளம் சந்தியில் இன்று காலை 7 மணியளவில் இடம்பெற்ற விபத்தில்  தாயும் மகளும் படுகாயமடைந்த நிலையில்  வவனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறிதது மேலும் தெரியவருகையில்,

இன்று காலை சூசைப்பிள்ளையார்குளம் சந்தியில் கந்தசாமி கோவில் வீதியிலிருந்து தனது மகளை பிளசர் ரக மோட்டார் சைக்கிளில் பாடசாலைக்கு  ஏற்றிச் சென்ற போது சூசைப்பிள்ளையார்குளம் வீதி வழியாகச் சென்ற மரக்கறிகள் ஏற்றிய கன்டர் ரக வாகனத்துடன்  மோட்டார் சைக்கிள் மோதியதில் குறித்த விபத்து நேர்ந்துள்ளது.

இவ் விபத்தில்  இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியில் உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவியும் மோட்டார் சைக்கிளினைச் செலுத்தி வந்த தாயும் படுகாயமடைந்த நிலையில் வவனியா பொது வைத்தியசாலையில் விபத்துப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவ  இடத்திற்குச் சென்ற பொலிஸார் விபத்திற்கு காரணமான மரக்கறி ஏற்றிச் சென்ற கன்டர் ரக  வாகனத்தையும், சாரதியையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.