முன்னாள் பிரதி அமைச்சர் சரத் குமார குணரத்ன உள்ளிட்ட 6 பேர் கொழும்பு மேல் நீதிமன்றத்தால் குற்றப்பத்திரிக்கை கையளிக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஜனாதிபதி தேர்தல் சமயத்தில் அரசியல் செயற்பாடுகளுக்காக 14 கோடி ரூபாயை பயன்படுத்தியது உள்ளிட்ட ஆறு குற்றச்சாட்டுகளின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது குற்றப்பத்திரிக்கை கையளிக்கப்பட்ட பின்னர் பிரதிவாதிகள் தலா 25000 ரூபா ரொக்க பிணையிலும் 5 இலட்சம் பெறுமதியான இரண்டு சரீர பிணைலும்  விடுவிக்கப்பட்டனர்.