நாட்டுக்குள் கொண்டு வரப்படும் போதைப் பொருளில் 63 சத வீதமானவை துறைமுகங்கள் ஊடாகவே நாட்டுக்குள் கொண்டுவரப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளதாக சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரவித்துள்ளார்.

63 சத வீதமான துறைமுகங்களினூடான கடத்தல்களில் 25 சத வீதமான போதைப் பொருட்கள் தெற்கு மற்றும் மேல் மாகாண துறைமுகங்கள் ஊடாக நாட்டிற்குள் கொண்டு வரப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

நாட்டினுள் போதைப் பொருள் கடத்தலானது பாதாள உலகத்துடன் தொடர்புபட்டுள்ளதாகவும் பாதாள உலத்தையும் போதைப் பொருளினையும் ஒழிக்க விஷேட திட்டங்கள் வகுக்கப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தார்.