மெக்சிகோவில் போதை பொருள் கடத்தல் கும்பல் ஒன்று 3 மாணவர்களை கடத்தி அவர்களை அசிட்டில் முக்கி படுகொலை செய்த செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மாதம் மெக்சிகோவில் திரைப்பட கல்லூரி மாணவர்கள் 3 பேர் கடத்தப்பட்டனர். மாணவர்களின் பெற்றோர்கள் அளித்த முறைப்பாட்டின் பேரில் பொலிஸார் தீவிர விசாரணைகளை  மேற்கொண்டனர்.

பொலிஸார் மேற்கொண்ட தீவிர விசாரணைகளில் கடத்தப்பட்ட 3 மாணவர்களும் அசிட்டில் முக்கி படு கொலை செய்யப்பட்ட விடயம் தெரிய வந்துள்ளது.

பொலிஸார்  மாணவர்களின் உடலை கைப்பற்றி டி.என்.ஏ பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.

மேலும் இக் கொடூர சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.