ஹொரணை - பெல்லபிட்டிய பிரதேச இறப்பர் தொழிற்சாலையில் ஏற்பட்ட அனர்த்தம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தொழிற்சாலையின் முகாமையாளர் மற்றும் இரசாயண பகுப்பாய்வு பிரிவின் கட்டுப்பாட்டாளர் ஆகிய இருவரதும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த இருவரையும்  இன்று ஹொரணை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே  எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகளுக்கு,

இறப்பர் தொழிற்சாலை முகாமையாளர் விளக்கமறியலில்!!!

ஐவரின் உயிரிழப்பிற்கு காரணமான தொழிற்சாலையின் முகாமையாளர் கைது!!!