நியூஸிலாந்துப் பிரதமர் ஜோன் கீ  இரு நாடுகளுக்கும் இடையில் வளர்ந்து வரும் வர்த்தக மற்றும் அரசியல் உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்குடன் அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். 

இலங்கை வரும் ஜோன் கீ, ஜனாதிபதி, பிரதமரை சந்தித்து கலந்துரையாடவுள்ளதோடு, உள்ளூரிலுள்ள வர்த்தகர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். 

இவர் கடந்த 2013ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்ள இலங்கை வந்தமை குறிப்பிடத்தக்கது.