அம்பாறை - தீகவாபி பிரதேசத்தில் குப்பைகளை உட்கொண்டதன் காரணமாக இதுவரை 6 யானைகள் உயிரிழந்துள்ளதாக  அம்பாறை வனசீவராசிகள் பாதுகாப்புப் பிரிவின் கால்நடை மருத்துவர் நிஹால் புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.

கல்முனை , சம்மாந்துறை மற்றும் அக்கரைப்பற்று பிரதேசங்களில் இருந்து கொண்டுவரப்படும் குப்பைகள் குறித்த இடத்தில் கொட்டப்படுவதாக பிரதேசவாசிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

குறித்த வனப்பகுதியிலிருந்து குப்பைகளை உண்பதற்காக காட்டு யானைகள் நாள்தோறும் வருவதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.