குண்டுவெடிப்பில் காயமடைந்த அமெரிக்க இராணுவ வீரருக்கு முதன் முறையாக வெற்றிகரமாக  ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த இராணுவ வீரர் ஒருவருக்கு ஆப்கானிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்பில் அடி வயிற்றுப் பகுதியில் ஆணுறுப்பு உள்ளிட்ட உறுப்புகள் பாதிக்கப்பட்டன.

அதற்காக குறித்த இராணுவ வீரர் மேரிலேண்டில் உள்ள பால்டிமோர் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் சிகிச்சை மேற்கொண்டார்.

இராணுவ வீரரை பரிசோதித்த வைத்தியர்கள் மரணம் அடைந்த ஒரு நபரின் உறுப்பை தானமாக பெற்று ஆணுறுப்பு மற்றும் விதைப்பை மாற்று சத்திர சிகிச்சையை மேற்கொண்டனர் 

இந்த சத்திர சிகிச்சையை 11 வைத்தியர்கள்  அடங்கிய குழு 14 மணிநேரத்தில்  வெற்றிகரமாக நடத்தி முடித்தது.

மேலும்  இராணுவ வீரர் சத்திர சிகிச்சையின் பின்னர் தான் வழக்கம்போல் செயல்படுவதாக தெரிவித்துள்ளார்.